சினிமாவெள்ளித்திரை

‘களவாணி’ இயக்குனருடன் இணைந்த பிரபல நடிகர்!

பிரபல நடிகர்

2010-ம் ஆண்டு வெளியான ‘பானா காத்தாடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் அதர்வா. அதனைத்தொடர்ந்து ‘பரதேசி’, ‘இமைக்கா நொடிகள்’ போன்ற படங்களின் மூலம் பிரபலமானார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘குறுதி ஆட்டம்’, ‘டிரிக்கர்’ போன்ற எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இந்நிலையில், நடிகர் அதர்வா அடுத்ததாக இயக்குனர் ஏ.சற்குணம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். இவர் ‘களவாணி’ , ‘வாகை சூடவா’ உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்தவர்.

இந்நிலையில், ‘பட்டத்து அரசன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

Related posts