Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»மேற்கு ஆசிய பதற்றம்: அரசியல் கட்சிகள் பொறுப்பற்ற அறிக்கைகளை தவிர்க்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

மேற்கு ஆசிய பதற்றம்: அரசியல் கட்சிகள் பொறுப்பற்ற அறிக்கைகளை தவிர்க்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

March 28, 20262 Mins Read9 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாற வேண்டும், என்றும் அதற்கு 140 கோடி மக்களின் கூட்டு முயற்சி அவசியம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், மேற்கு ஆசிய போர் பதற்றம் குறித்து குறிப்பிட்ட அவர், “இதுபோன்ற சமயங்களில் அரசியல் கட்சிகள் பொறுப்பற்ற அறிக்கைகளை விடுவதை தவிர்க்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள வளர்ச்சி அடைந்த பாரதத்தை அடைய வேண்டும். இதற்கு 140 கோடி மக்களின் கூட்டு முயற்சியும் ஒற்றுமையும் அவசியம். நேரத்தைச் சேமித்து செலவுகளைக் குறைப்பதன் மூலம் மக்களின் வசதியை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் முன்னுரிமை.

தற்போதைய உலகளாவிய நெருக்கடியை நாம் அமைதியாகவும் பொறுமையுடனும் ஒற்றுமையுடனும் எதிர்கொள்ள வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு நான் மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கிறேன். இது ஒரு உலகளாவிய நெருக்கடி. ஆனால், நாம் இந்தியாவின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதுவே நமது மிகப் பெரிய பலம்.

இதையும் படிக்க :  ஜார்க்கண்ட் ஏர் ஆம்புலன்ஸ் விபத்து: நோயாளி உட்பட 7 பேர் பலி

தற்போதைய நிலைமை குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. பல்வேறு மாநில முதல்வர்களுடனும் விரிவான மற்றும் நேர்மறையான ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

இதுபோன்ற சமயங்களில் அரசியல் கட்சிகள், குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் உள்ளவர்கள் பொறுப்பற்ற அறிக்கைகளை விடுவதை தவிர்க்க வேண்டும். நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் கருத்துகளைக் கூறுபவர்கள் அரசியல் விவாதங்களில் சில வெற்றிகளைப் பெறலாம். ஆனால், அத்தகைய பேச்சுக்களை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதல்களால் ஏற்படும் சவால்களை இந்தியா முழு பலத்துடன் எதிர்கொண்டு வருகிறது. தனது குடிமக்களைப் பாதுகாக்க நாடு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இந்த மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து கிடைக்கும் கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவற்றை இந்தியா சார்ந்திருக்கிறது. இந்த சுமை குடும்பங்கள் மற்றும் விவசாயிகள் மீது விழாமல் இருப்பதை உறுதி செய்ய அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதையும் படிக்க :  சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் முதலீடு - பணத்தின் அதிகாரப்பூர்வ மதிப்பீடு இல்லை ! மத்திய நிதியமைச்சர் பதில் !

சாமானிய மக்களும் மலிவு விலையில் விமானப் பயணம் மேற்கொள்வதை உறுதி செய்வதிலும், விமான நிலைய உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. சாதாரண குடும்பங்களின் கைக்கு எட்டும் தூரத்தில் விமானப் பயணம் இருப்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் உதான் திட்டத்தை தொடங்கினோம்.

கடந்த சில ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் 1.6 கோடிக்கும் அதிமான மக்கள் மலிவு விலையில் விமானப் பயணம் செய்துள்ளனர். சமீபத்தில் ரூ.29,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் சிறிய நகரங்களில் புதிய விமான நிலையங்களை உருவாக்கவும் சுமார் 200 ஹெலிபேடுகளை கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஐபிஎல் 2026: உயிரிழந்த ரசிகர்களின் நினைவாக மைதானத்தில் மவுன அஞ்சலி செலுத்திய வீரர்கள்
Next Article கோலாகலமாக தொடங்கியது ஐபிஎல் 2026 சீசன்: முதல் பந்தை வீசினார் ஜேக்கப் டஃபி – RCB vs SRH

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.