நரேன் – அஜித் இருவரும் இணைந்து பந்தயத்தில் ஈடுபடுவது புதிது என்றாலும், இவர்களுக்கு இடையிலான நட்பு 2000-களின் முற்பகுதியில் நரேன் ஃபார்முலா-2 போட்டியில் பங்கேற்றபோதே தொடங்கியது.
இந்தியாவின் முதல் ஃபார்முலா-1 வீரரான நரேன் கார்த்திகேயன், வரவிருக்கும் ஆசியன் லீ மான்ஸ் சீரிஸில் நடிகர் அஜித்துடன் சேர்ந்து பந்தயத்தில் பங்கேற்கவுள்ளனர். இதில் வெற்றி பெற்றால், ஃபிரான்சில் நடக்கும் உலகப் புகழ் பெற்ற 24 ஹவர்ஸ் ஆஃப் லீ மான்ஸ் பந்தயத்திற்கு இவர்கள் அணி தகுதி பெறும்.
இருவரும் இணைந்து பந்தயத்தில் ஈடுபடும் யோசனை கடந்த ஆண்டு துபாயில் நடந்த இரவு விருந்தின்போதுதான் முதன்முதலில் உருவானது. இப்போது இந்திய ஓட்டுநர்களைக் கொண்ட ஒரு உண்மையான இந்திய அணியை உருவாக்குவது பற்றி அஜித் பேசினார்.
ஆரம்பத்தில் நான் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டேன். ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் எனக்கு போன் செய்து, ‘நாம் இதைச் செய்யலாம்’ என்று கூறினார்,” என நரேன் கார்த்திகேயன் தெரிவித்தார்.

