Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, July 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»BSNL 4ஜி சேவையை நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

BSNL 4ஜி சேவையை நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

September 26, 20252 Mins Read65 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பிஎஸ்என்எல் 4ஜி சேவையை நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்க இருப்பதாக மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நாளை இரண்டு மிக முக்கிய திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். முதலாவது, பிஎஸ்என்எலின் 4ஜி சேவையாகும்.

நாடு முழுவதும் உள்ள 98,000 தளங்களில் அறிமுகப்படுத்தப்படும். இந்தியாவின் எந்த பகுதியும் விடுபடாது. எங்களின் 4ஜி டவர்கள் மற்றும் பிடிஎஸ்கள் ஏற்கனவே நாடு முழுவதும் 2.2 கோடி வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருகின்றன.

இது முழுமையாக மென்பொருள் மூலம் இயக்கப்பட்டு, தடையில்லாமல் 5Gக்கு மேம்படுத்தப்படும்.

இந்த 4ஜி சேவையுடன், டிஜிட்டல் பாரத் நிதி மூலம் இந்தியாவின் 100 சதவீத 4ஜி செறிவு நெட்வொர்க்கையும் அறிமுகப்படுத்துகிறோம்.

இதையும் படிக்க :  சீன கப்பலுக்கு இந்தியா எதிர்ப்பு - இலங்கை சென்றது உளவுக் கப்பல் !

இதில், 29,000 முதல் 30,000 வரையான கிராமங்கள் 4ஜி செறிவு திட்டப் பணியின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன, இவ்வாறு அவர் கூறினார்.

இன்று ஒரு வரலாற்று நாள். பிஎஸ்என்எல்லுக்கோ, தொழில்நுட்ப உபகரண உற்பத்தி துறைக்கோ மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒரு வரலாற்று நாள்.

பிரதமர் நரேந்திர மோடி நாளை ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். அது பிரதமர் தலைமையில் உலகத்திற்கும், உலக சமூகத்திற்கும் இந்தியாவின் பங்களிப்பாக இருக்கும்.

இது தொலைதொடர்புத் துறைக்கு ஒரு புதிய யுகம். உலகில் தொலைதொடர்பு உபகரணங்களை உற்பத்தி செய்யும் நான்கு பெரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் நுழைந்துள்ளது.

டென்மார்க், ஸ்வீடன், தென் கொரியா, சீனா ஆகிய நான்கு பெரும் நாடுகள் மற்றும் ஐந்து பெரும் நிறுவனங்கள் உள்ளன.

இதையும் படிக்க :  திமுகவின் 'திராவிட மாடல்' என்பது திருமங்கலம் மாடல் தான் - பொன். ராதாகிருஷ்ணன் குற்றசாட்டு !

தற்போது, இந்தியா உலக வரலாற்றில் தொலைத்தொடர்பு உபகரணங்களை உற்பத்தி செய்யும் ஐந்தாவது நாடாகவும், ஆறாவது நிறுவனமாகவும் உள்ளது.

இந்தப் பெரிய மாற்றத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுத்து, உந்துதல் அளித்து, வழிநடத்தினார்.

2020ம் ஆண்டில், 4ஜி உபகரணங்களுக்கான டெண்டர்கள் விடுக்கப்பட்டபோது, வெளிநாட்டு உபகரணங்களை வாங்குவதற்கு பதிலாக, நமது சொந்த 4ஜி உபகரணங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வோம் என்று ஒரு துணிச்சலான முடிவை அவர் எடுத்தார்.

அதன்படி, வரலாற்று ரீதியாக வெளிநாட்டு தொழில்நுட்பத்தை வாங்குபவராக இருந்த நம் நாடு, வெறும் 22 மாதங்களில், சொந்த உள்நாட்டு 4ஜி உபகரணங்களை உருவாக்கும் நாடாக மாறி சாதனை படைத்துள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.

4G BSNL pm narendra modi
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக் 21 ரக போர் விமானங்களுக்கு வழியனுப்பு விழா
Next Article சுங்கத்துறை பறிமுதல் செய்த சொகுசு காரை திருப்பி தர துல்கர் சல்மான் மனு

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,775 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,109 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,011 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,775 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,109 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,011 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.