Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, July 6
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»ஶ்ரீதேவி சொத்து விவகாரம் – வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

ஶ்ரீதேவி சொத்து விவகாரம் – வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

March 17, 20262 Mins Read20 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மறைந்த நடிகை ஸ்ரீதேவி சொத்து விவகாரம் தொடர்பாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற உரிமையியல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, கடந்த 1988-ஆம் ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 4.77 ஏக்கர் நிலத்தை சம்பந்த முதலியார் என்பவரின் குடும்பத்தினரிடம் இருந்து வாங்கியுள்ளார். அந்த சொத்தை கடந்த 37 ஆண்டுகளாக ஶ்ரீதேவி குடும்பத்தினர் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரன் முதலியாரின் 2வது மனைவி, மகன் நடராஜன், மகள் சிவகாமி ஆகிய 3 பேரும் வாரிசு சான்றிதழ் பெற்று, சொத்தில் தங்களுக்கு பங்கு உள்ளது எனக் கூறி செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதையும் படிக்க :  தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையில் இருந்த செய்தி என்னால்தான் தெரிய வந்தது - சீமான் !

இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் அவரது மகள்களான ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம், முழுமையான விசாரணைக்குப் பின்பே, சொத்தின் உரிமை குறித்து முடிவெடுக்க முடியும் என்று கூறி போனி கபூர் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

செங்கல்பட்டு நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து போனி கபூர் குடும்பத்தினர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது, “சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரன் முதலியாரின் 2வது மனைவி, மகன் நடராஜன், மகள் சிவகாமி ஆகிய 3 பேரும் வாரிசு சான்று பெற்று போலியான ஆவணங்களை தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்து உள்ளனர். சொத்தின் உரிமையாளர் மயிலாப்பூரில் வசித்து வந்த நிலையில், அவரது வாரிசுகள் எனக் கூறி மூன்று பேரும் தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2005ஆம் ஆண்டு வாரிசு சான்றிதழ் பெற்றுள்ளனர். முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது தன்னை சந்திரசேகரன் திருமணம் செய்து கொண்டதாக 2வது மனைவி கூறியுள்ளார். இதனால் மூவரையும் சட்டபூர்வ வாரிசுகளாக கூற முடியாது. எங்கள் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் நிராகரித்தது தவறு” என்று அந்த மனுவில் போனி கபூர் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

இதையும் படிக்க :  மத்திய அரசிடம் பிரதமரின் காவல் பதக்கம் பெறும் தமிழக காவலர்கள் !

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.வி.தமிழ்செல்வி, இறுதி விசாரணைக்காக, வழக்கை மார்ச் 26ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதுவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅதிமுக கூட்டணிக்கு வந்தால் விஜய்க்கு லாபம் – ஜெயக்குமார்
Next Article கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி சென்றார் செந்தில் பாலாஜி

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,690 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,079 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,000 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,690 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,079 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,000 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.