Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, June 14
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி சென்றார் செந்தில் பாலாஜி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி சென்றார் செந்தில் பாலாஜி

March 17, 20262 Mins Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கரூர் விவகாரம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு ஆஜராக நள்ளிரவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பரப்புரை கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பான வழக்கானது தற்போது சிபிஐ வசம் உள்ள நிலையில், தவெக நிர்வாகிகள் உட்பட பலரிடமும் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஜனவரி 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு முறை தவெக தலைவர் விஜய்யும் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். பல மணிநேரம் நடைபெற்ற விசாரணையில் அதிகாரிகள் பல அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்ததாகவும், அதற்கு விஜய் அளித்த பதில்களை எழுத்துப்பூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதையும் படிக்க :  ‘பணப்பெட்டியை வாங்கிக் கொண்டு திமுகவுடன் கூட்டணி!’ - தேமுதிகவை தாக்கும் நயினார் நாகேந்திரன்

அதனைத் தொடர்ந்து மீண்டும் மார்ச் 10ஆம் தேதி, அடுத்தகட்ட விசாரணைக்கு ஆஜராகும்படி விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால் அந்த நாளில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த கட்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் மற்றொரு நாளில் ஆஜராக விஜய் கோரிக்கை விடுத்ததை அடுத்து, மார்ச் 15ஆம் தேதி ஆஜராகி சிபிஐயின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

விஜயைத் தொடர்ந்து திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணைக்கு நடத்த வேண்டுமென சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில், இன்று (மார்ச் 17) அவர் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகவுள்ளார். அதற்காக, நள்ளிரவில் சென்னை விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் ராஜீவ் காந்தி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

இதையும் படிக்க :  அதிமுக கூட்டணியில் பாஜக 27, பாமக 18, அமமுக 11 இடங்களில் போட்டி - தொகுதிப் பங்கீடு விவரம்

முன்னதாக, தனக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பது குறித்து செந்தில் பாலாஜி கூறுகையில், “மார்ச் 17ஆம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி மின்னஞ்சல் மூலம் சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. நேரில் ஆஜராகி உரிய பதில்களை அளிப்பேன். எதன் அடிப்படையில் எனக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை.

அந்த கட்சி கூட்டத்திற்கு அனுமதி கோரி நிகழ்ச்சியை நடத்தியது. அதற்கு காவல்துறையும், கரூர் மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்கியது. ஆனால் எனக்கு சம்மன் அளித்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஶ்ரீதேவி சொத்து விவகாரம் – வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
Next Article விளாத்திகுளம் மாணவிக்கு நடந்த கொடூரத்தை மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது – தமிழிசை ஆவேசம்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,621 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,050 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,996 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,621 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,050 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,996 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.