Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, June 23
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஃபிட்னஸ்»ஆண்களுக்கு குறைந்து வரும் ‘Y’ குரோமோசோம்: புற்றுநோய்க்கு வழி வகுப்பதாக ஆய்வில் தகவல்!

ஆண்களுக்கு குறைந்து வரும் ‘Y’ குரோமோசோம்: புற்றுநோய்க்கு வழி வகுப்பதாக ஆய்வில் தகவல்!

February 24, 20262 Mins Read21 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இயற்கையின் படைப்பில் ஆண், பெண் என்ற வேறுபாட்டைத் தீர்மானிப்பது நமது செல்களுக்குள் இருக்கும் குரோமோசோம்கள் தான். பொதுவாக பெண்களுக்கு இரண்டு ‘X’ குரோமோசோம்கள் (XX) இருக்கும், ஆண்களுக்கு ஒரு ‘X’ மற்றும் ஒரு ‘Y’ குரோமோசோம் (XY) இருக்கும்.

நீண்டகாலமாக, இந்த ‘Y’ குரோமோசோம் என்பது வெறும் ஆண் தன்மையை நிர்ணயிக்க மட்டுமே உதவுகிறது என்று அறிவியலாளர்கள் நம்பினர். ஆனால், சமீபத்திய ஆராய்ச்சிகள் ‘Y’ குரோமோசோம் இழப்பு ஆண்களுக்கு இதய நோய் முதல் அல்சைமர் வரை என பாதிப்பை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு உள்ளது என தெரிய வந்துள்ளது.

வயதாகும் போது காணாமல் போகும் ‘Y’: ஆண்கள் வயதாகும் போது, அவர்களின் உடலில் உள்ள சில செல்கள் இந்த ‘Y’ குரோமோசோமை இழக்கத் தொடங்குகின்றன. இதற்கு ‘மொசைக் லாஸ் ஆஃப் ஒய்’ (mLOY) என்று பெயர். 60 வயதுடைய ஆண்களில் சுமார் 40 சதவீதத்தினருக்கு இந்த இழப்பு ஏற்படுகிறது என்றும் 90 வயதை எட்டும்போது, இது 57 சதவீதமாக அதிகரிக்கிறது என்கிறது ஆய்வு.

செல்கள் பிரிந்து வளரும் போது ஏற்படும் தவறுகளால் ‘Y’ குரோமோசோம் விடுபட்டுப் போகிறது. புகைப்பிடித்தல் மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த சூழலில் வாழ்வது இந்த இழப்பை இன்னும் வேகப்படுத்துகிறது.

இதையும் படிக்க :  இயற்கையாக கிடைக்கும் இருமல் மருந்துகள்!

இதனால் என்ன பிரச்சனை? மற்ற குரோமோசோம்களுடன் ஒப்பிடும் போது ‘Y’ குரோமோசோம் அளவில் சிறியது. இதில் வெறும் 51 புரதங்களை உருவாக்கும் மரபணுக்கள் மட்டுமே உள்ளன (மற்றவற்றில் ஆயிரக்கணக்கானவை இருக்கும்). செல்கள் ஆய்வகத்தில் வளர்க்கப்படும்போது ‘Y’ குரோமோசோம் இல்லாமலேயே உயிர்வாழும் என்பதால், இது உடலுக்குத் தேவையில்லாத ஒன்று என முன்பு கருதப்பட்டது.

ஆனால், இப்போது கிடைத்துள்ள தரவுகள் வேறு கதையைச் சொல்கின்றன. ‘Y’ குரோமோசோமை இழக்கும் ஆண்களுக்கு, மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பு ஏற்படும் அபாயம் அதிகம். பல வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதற்கும், பாதிப்பு தீவிரமடைவதற்கும் இது காரணமாகிறது. மறதி நோய் உள்ள ஆண்களிடம் ‘Y’ குரோமோசோம் இழப்பு 10 மடங்கு அதிகமாகக் காணப்படுகிறது.

ஆண்களிடையே கோவிட் மரணங்கள் அதிகமாக இருந்ததற்கும், இந்த குரோமோசோம் இழப்பிற்கும் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆய்வு சொல்வது என்ன? Hematopoietic loss of Y chromosome leads to cardiac fibrosis and heart failure mortality என்ற தலைப்பில் வெளியான ஆய்வுக்கட்டுரையில், எலிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், ‘Y’ குரோமோசோம் இல்லாத ரத்த செல்கள் செலுத்தப்பட்ட எலிகளின் இதயம் பலவீனமடைந்து, அவை சீக்கிரம் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இது ‘Y’ குரோமோசோம் வெறும் ஆண்மைக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் அவசியம் என்பதைக் காட்டுகிறது.

இதையும் படிக்க :  ஆறு மாவட்டங்களில் 12ம் தேதி தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்

குறைவான மரபணுக்கள்! ‘Y’ குரோமோசோமில் உள்ள சில மரபணுக்கள் உடல் முழுவதும் வேலை செய்கின்றன. இவை மற்ற மரபணுக்களைக் கட்டுப்படுத்துவதிலும், புற்றுநோயைத் தடுப்பதிலும் (Cancer Suppressors) முக்கியப் பங்கு வகிக்கின்றன.

‘Y’ குரோமோசோம் மறைந்து போகும்போது, இந்த பாதுகாப்பு கவசம் இல்லாமல் போய்விடுகிறது. இதனால் ரத்த செல்கள் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடு சீர்குலைந்து, இதயப் பாதிப்பு போன்ற சிக்கல்கள் உருவாகின்றன.

‘Y’ குரோமோசோம் கடந்த 150 மில்லியன் ஆண்டுகளாக தேய்ந்து கொண்டே வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. சில வகை எலிகளில் இது ஏற்கனவே முழுமையாக மறைந்துவிட்டது. மனிதர்களில் இதன் முழுமையான வரைபடம் (DNA Sequence) சில ஆண்டுகளுக்கு முன்புதான் முழுமையாகக் கண்டறியப்பட்டது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசிறுமியின் உயிரை பறித்த பேன் தொல்லை! அலட்சியம் வேண்டாம் பெற்றோர்களே!
Next Article பூனை உங்கள் மடியில் படுத்தால் என்ன நடக்கும் தெரியுமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

Related Posts

ஃபிட்னஸ்

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கனுமா? இந்த 6 ‘சூப்பர் ஃபுட்ஸ்’ கொடுங்க!

March 31, 2026
ஃபிட்னஸ்

காலை Vs மாலை: இதய ஆரோக்கியத்தை காக்க உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் எது?

March 26, 2026
ஃபிட்னஸ்

கை நடுக்கம் பிரச்சனை? காரணமாகும் 3 வைட்டமின் குறைபாடுகள்!

March 25, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,648 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,062 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,998 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,648 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,062 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,998 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.