ரிலீஸ் தேதி
தேஜா சஜ்ஜா நடிப்பில், பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஹனு-மான்’. இதில் நடிகை அமிர்தா ஐயர் கதாநாயகியாக நடிக்க, வரலட்சுமி சரத்குமார், வினய் , கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கிறது. தற்போது இதன் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது.
இந்நிலையில், ‘ஹனு-மான்’ படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளில் வருகிற மே 12-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
#HanuManFromMay12th pic.twitter.com/SIDCSD6wns
— Teja Sajja (@tejasajja123) January 9, 2023

