திடீர் சந்திப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது 169-வது திரைப்படமான ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி மற்றும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். மேலும், இந்த படத்தில் நடிகர் மோகன்லால் இணைந்துள்ளதாக அண்மையில் படக்குழு அறிவித்தது. இதன் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றுள்ளார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்துள்ளார். மேலும், இது குறித்து அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
After a long time..I met my dear friend and respected Chandrababu Naidu garu and spent memorable time ..I wished him good health and great success in his political life. @ncbn pic.twitter.com/shIoKLROz4
— Rajinikanth (@rajinikanth) January 10, 2023

