சினிமாவெள்ளித்திரை

கவனம் ஈர்க்கும் நயன்தாரா பட டீசர்!

டீசர் ரிலீஸ்

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கனெக்ட்’. ‘மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இப்படத்தை இயக்க, ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய், ஹனியா நஃபிஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க, மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், நயன்தாராவின் 38-வது பிறந்தநாளையொட்டி ‘கனெக்ட்’ படத்தின் டீசர் நேற்று வெளியானது. இது இணையத்தில் தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.

Related posts