நாளை ரிலீஸ்
கடந்த 2009-ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘அவதார்’. இப்படம் மாபெரும் வசூல் சாதனை நிகழ்த்தியது. இதனையடுத்து இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ என்ற பெயரில் நாளை உலகமெங்கும் 52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம் 160 மொழிகளில் வெளியாகிறது.
மேலும், இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் அதிக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
