வைரல் பாடல்
நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் வெற்றி இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘தீங்கிரை’. இதில் அபூர்வா ராவ் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் கதாநாயகிகளாக நடிக்க, அறிமுக இயக்குனர் பிரகாஷ் ராகவதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும், ஹரிஷ் அர்ஜுன் இசையமைக்க, சஹானா ஸ்டுடியோஸ் மற்றும் டிடபுள்யூடி மீடியா இணைந்து தயாரித்துள்ளது. கிரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது.
இந்நிலையில், ‘தீங்கிரை’ படத்தின் ‘அவிழாத காலை’ என்னும் பாடல் வெளியாகி பத்து லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.

