டிரைலர்
திரெளபதி’, ‘ருத்ரதாண்டவம்’ படங்களை அடுத்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பகாசூரன்’. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, நட்டி நட்ராஜ், ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், சாம் சிஎஸ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இதனிடையே இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் ஈர்த்தது.
இந்நிலையில், ‘பகாசூரன்’ படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Here is #BakasuranTrailer 🔥
Protect what’s yours https://t.co/gUZQhrPGd5 #Bakasuran #பகாசூரன்
A @SamCSmusic musical@natty_nataraj @mohandreamer @ProBhuvan @Mrtmusicoff @Gmfilmcorporat1 pic.twitter.com/t51i2c3CWH
— selvaraghavan (@selvaraghavan) December 5, 2022

