இரண்டாம் பாகம்
தமிழில் சென்னை 28, பில்லா, சாமி, சண்டக்கோழி, எந்திரன், விஸ்வரூபம், வேலையில்லா பட்டதாரி, கோலி சோடா ஆகிய படங்களுக்கு ஏற்கனவே இரண்டாம் பாகங்கள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொன்னியின் செல்வன், இந்தியன் போன்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் படப்பிடிப்பில் உள்ளது. இதனிடையே இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘நீர்ப்பறவை’. இதில் விஷ்ணு விஷால், சுனைனா, நந்திதா தாஸ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் நீர்ப்பறவை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு எழுந்தது
இந்நிலையில், நீர்ப்பறவை படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என இயக்குனர் சீனு ராமசாமி அறிவித்துள்ளார்.

