வாழ்க்கை படம்
திரையுலகில் அரசியல் தலைவர்கள் வாழ்க்கையை படமாக்குவது வழக்கம். அந்தவகையில் தமிழக முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஆந்திர முதலமைச்சர்கள் என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி உள்ளிட்டோரின் வாழ்க்கை ஏற்கனவே திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்நிலையில், தற்போது கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வாழ்க்கையையும் படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் அவர் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து சித்தராமையா கூறுகையில், ‘எனது வாழ்க்கையை திரைப்படமாக உருவாக்க கட்சியினர் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அதில் நான் நடிக்கப்போவதில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

