டிரைலர்
மாமனிதன் படத்தை அடுத்து விஜய் சேதுபதியின் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கி வருகிறார். ‘டிஎஸ்பி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் அனு கீர்த்திவாஸ் கதாநாயகியாக நடிக்க, பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். மேலும், இப்படம் வருகிற டிசம்பர் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘டிஎஸ்பி’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Please watch #DSP trailer
▶️ https://t.co/8V1REJFP1f#DSPonDec2nd
A @ponramvvs directorial
A @immancomposer musical
A @stonebenchers production
@karthiksubbaraj @kaarthekeyens @kalyanshankar @anukreethy_vas @vivekharshan @Venkatesh7888 @dineshkrishnanb @Veerasamar pic.twitter.com/nF4dnyLuQ6— VijaySethupathi (@VijaySethuOffl) November 25, 2022

