ஃபர்ஸ்ட் லுக்
தமிழில் வாலி, குஷி போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. பின்னர் ‘அன்பே ஆருயிரே’, நியூ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். மேலும், மாநாடு, டான் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்தார். இவர் தற்போது ‘பொம்மை’, ‘மார்க் ஆண்டனி’ ‘ஆர்சி 15’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே எஸ்.ஜே.சூர்யா ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ள ‘வதந்தி’ எனும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில், ‘வதந்தி’ வெப் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் இந்த வெப் தொடர் வருகிற டிசம்பர் 2-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
It’s not a rumour about me…it’s my first web series in @PrimeVideo Vadhandhi. Very happy to share the first look 🥰🥰🥰👍👍👍💐💐💐Catch our new thriller #VadhandhiOnPrime on 2nd December directed by @andrewxvasanth and produced by @PushkarGayatri pic.twitter.com/0JOf5Z7Uz3
— S J Suryah (@iam_SJSuryah) November 17, 2022

