நயன்தாரா படம்
ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கனெக்ட்’. இப்படத்தை ‘மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்குகிறார். மேலும், சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய், ஹனியா நஃபிஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
டீசர் ரிலீஸ்
இந்நிலையில், ‘கனெக்ட்’ படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நயன்தாராவின் 38-வது பிறந்தநாளையொட்டி இப்படம் வருகிற நவம்பர் 18-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

