சினிமாவெள்ளித்திரை

சினிமாவை விட்டு விலகும் பிரபல ஹிந்தி நடிகர்!

பிரபல ஹிந்தி நடிகர்

ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர்கான். 35 ஆண்டுகளாக பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ள இவர் சமீபத்தில் வெளியான லால் சிங் சத்தா திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனால் அமீர் கான் ஏற்கனவே நடிக்கவிருந்த ‘சாம்பியன்ஸ்’ படத்தில் நடிக்க மாட்டார் என்று கூறப்பட்டது.

புதிய படம் 

இந்நிலையில், இது குறித்து நடிகர் அமீர்கான் பேசுகையில், லால் சிங் படத்திற்கு பிறகு ‘சாம்பியன்ஸ்’ படத்தில் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால், நான் தற்போது குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புகிறேன். இதனால் அடுத்த ஒன்றரை ஆண்டுகள் நடிப்பதிலிருந்து ஓய்வெடுக்க உள்ளேன்’ என கூறியுள்ளார்.

Related posts