தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.
சாமி தரிசனம்
அதனைத்தொடர்ந்து விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இதனிடையே பட வாய்ப்புகள் குறைந்ததால் சிறிது காலம் சினிமாவுக்கு ஓய்வு கொடுத்தார். அதனைத்தொடர்ந்து ‘மஹா’ என்ற படத்தின் மூலம் மீண்டும் தனது சினிமா பயணத்தை தொடங்கினார். தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் ஹன்சிகா நடிக்கிறார். இதில் இவருடன் சேர்ந்து மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிகிடா ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் ஆர்.கண்ணன், நடிகை ஹன்சிகா இருவரும் காளிகாம்பாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

