ரிலீஸ் தேதி
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியுள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் வரும் டிசம்பர் 2-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.