சுற்றுசூழல்தமிழ்நாடு

புயலுக்கு வாய்ப்பில்லை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி இலங்கை கடலோர பகுதிகளில் நிலவி வருகிறது. அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று வலுவடைந்துள்ளது. இதனால் வருகிற 14-ந்தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி இன்று சென்னை உள்பட வட தமிழக கடலோர பகுதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலு இழந்து கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Related posts