முதல் பாடல்
இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்‘வாத்தி’. இப்படத்தை தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்துள்ளார். சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படம் தெலுங்கில் ‘சார்’ என்ற தலைப்பிலும், தமிழில் ‘வாத்தி’ என்ற தலைப்பிலும் வெளியாகவுள்ளது. இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், வாத்தி படத்தின் ‘வா வாத்தி’ என்ற முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்பாடலை நடிகர் தனுஷ் எழுதியுள்ளார்.

