புதிய படம்
‘மீகாமன்’, ‘தடையறத் தாக்க’, ‘தடம்’ ஆகிய படங்களை இயக்கியதின் மூலம் பிரபலமானவர் மகிழ் திருமேனி. இவர் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘கலகத் தலைவன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்க, பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
வைரலாகும் டிரைலர்
இந்நிலையில், ‘கலகத் தலைவன்’ படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் மிஷ்கின், மாரி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். இப்படத்தின் ட்ரைலெர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
#KalagaThalaivan trailer is out now ➡️ https://t.co/q3RdfV7z6f @Udhaystalin #MagizhThirumeni @AgerwalNidhhi @Aravoffl @KalaiActor @anganaroy_10 @ArrolCorelli @MShenbagamoort3 #RArjunDurai @kalaignartv_off @SonyMusicSouth @teamaimpr @ArrolCorelli @thesrikanthdeva @madhankarky pic.twitter.com/8jK8Jv6Yr1
— Red Giant Movies (@RedGiantMovies_) November 10, 2022

