புதிய படம்
விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்தில் நடிகர் கமல் ஹாசன் நடித்து வருகிறார். அதேபோல் இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் 2 பாகத்தை வெளியிடும் பணியில் ஈடுப்பட்டுள்ளார். இதனையடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை மணிரத்னம் இயக்குவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பது உறுதியாகியுள்ளது.
மேலும், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

