ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி பகுதியை சேர்ந்தவர் வீர வெங்கட சத்ய நாராயணா.
அரசு வேலை
லாரி அதிபரான இவருக்கு லாவண்யா என்பவருடன் திருமணமாகி 24 ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவரும் திருமணமாகி கணவர்களுடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், சத்ய நாராயணாவின் மூத்த மருமகன் தனக்கு அரசு வேலை கிடைத்தால் தனது மாமியார் குடும்பத்தினருடன் திருப்பதிக்கு வருவதாக வேண்டிக்கொண்டுள்ளார்.
திருப்பதி மலை
அதேபோல் அவருக்கு அரசு வேலையும் கிடைத்துள்ளது. இதனையடுத்து வீர வெங்கட சத்ய நாராயணா குடும்பத்தினருடன் திருப்பதி சென்றனர். அவர்கள் ஸ்ரீ வாரி மேட்டு நடைபாதையில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது சத்ய நாராயணா மனைவி லாவண்யாவை தோளில் சுமந்து கொண்டு படிக்கட்டுகளில் நடந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

