வைரல் புகைப்படங்கள்
2010-ம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அமலாபால். அதனைத்தொடர்ந்து மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் ஆகிய படங்களில் நடித்தது மூலம் தமிழில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். சமீபத்தில் இவர் நடித்து ஓடிடியில் வெளியான கடாவர் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில், நடிகை அமலாபால் தனது புதிய புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
Vacay mode 🔛#beach #beachbum #maldives pic.twitter.com/FuiNgQHktN
— Amala Paul ⭐️ (@Amala_ams) September 23, 2022

