வைரல் பாடல்
விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் ‘கொலை’. விடியும் முன் படத்தை இயக்கிய பாலாஜி குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். நடிகை ரித்திகா சிங் கதாநாயகியாக நடிக்க, மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், ‘பார்த்த நியாபகம்’ என்ற ‘கொலை’ படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.