முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக முக்கிய நிர்வாகிகளுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை
திமுகவின் 15-வது உட்கட்சி தேர்தல் மாவட்ட செயலாளர், மாவட்ட அவைத்தலைவர், மாவட்ட துணைச் செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனையொட்டி திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக முக்கிய நிர்வாகிகளுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

