தக்காளி வரத்து சற்று அதிகரித்துள்ளதால் தக்காளியின் விலையானது ரூ.40-ஆக குறைத்துள்ளது.
விலை நிலவரம்
கடந்த மாதம் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கர்நாடகாவில் பெய்த தொடர் மழையின் காரணமாக பிற மாநிலங்களில் இருந்து சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்தது. இதனால் கடந்த வாரங்களில் தக்காளியின் விலை அதிகரித்து காணப்பட்டது. அந்தவகையில் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கும், சில்லரை கடைகளில் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வரத்து அதிகரிப்பு
இந்நிலையில், கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளியின் விலை குறைய தொடங்கியுள்ளது. இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கும் சில்லரை கடைகளில் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

