8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய இயக்குனர் ஸ்ரீ கணேஷ், நடிகை சுகாசினி சஞ்சீவ் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
பிரபல இயக்குனர்
இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஸ்ரீ கணேஷ். இவர் 2017-ம் ஆண்டு வெளியான ‘8 தோட்டாக்கள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு அதர்வா நடிப்பில் ‘குருதி ஆட்டம்’ படத்தை இயக்கினார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி ஷங்கர் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில், இயக்குனர் ஸ்ரீ கணேஷ் நடிகை சுகாசினி சஞ்சீவ் என்பவரை தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார். சுகாசினி சஞ்சீவ் ‘சீதக்காதி’, ‘நெஞ்சுக்கு நீதி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

