இந்தியாவில் நேற்றை விட இன்றைய கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை அறிக்கை வெளியிட்டது. ‘இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7, 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 5, 439 விட அதிகமாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,44,28,393 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,38,35,852 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 64, 667 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5, 27, 874 ஆக அதிகரித்துள்ளது.

