சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த போதைப்பொருள் சிறப்பு அதிரடி சோதனையில் 31 நபர்கள் கைது செய்துள்ளனர்.
அதிரடி சோதனை
சென்னையில் கடந்த 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை சென்னை முழுவதும் 12 காவல் மாவட்டங்களில் உள்ள போலீசார் சிறப்பு அதிரடி வேட்டை நடத்தினர். இதில் ஆந்திராவில் இருந்து கஞ்சா உள்பட போதை பொருட்கள் கடத்தி வந்து பதுக்கி விற்பனை செய்து வந்தாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 31 குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 66 கிலோ கஞ்சா, 14 எல்எஸ்டி ஸ்டாம்புகள், 4 செல்போன்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 மூட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டது.

