புதிய அப்டேட்
‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரெளபதி’, ‘ருத்ரதாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி உருவாக்கியிருக்கும் திரைப்படம் ‘பகாசூரன்’ இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் முதன்மை கதாப்பாத்திரத்திலும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்து வருகிறார்கள். சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் வரும் 28-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ‘பகாசூரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
களம் கண்டு ஆடுவான் #பகாசூரன் #Bakasuran.. படத்தின் டீசர் நாளை காலை 10:10 மணிக்கு வெளியாகும் 💥💥
Stay tuned!@selvaraghavan @natty_nataraj @mohandreamer @SamCSmusic @Gmfilmcorporat1 @ProBhuvan @Mrtmusicoff pic.twitter.com/ujSDk170yQ
— Mohan G Kshatriyan (@mohandreamer) August 27, 2022

