அரசியல்சமூகம்தமிழ்நாடு

சாலையோர தள்ளுவண்டி கடைகள் – மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்த அரசாணை !

சாலையோர தள்ளுவண்டி கடைகள் நடத்த மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசு அரசாணை

இது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், ‘தெருவோர தள்ளுவண்டி கடைகள் நடத்துவதில் தகுதி உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்திட வேண்டும். தற்போதைய நிதி ஆண்டிலேயே இந்த திட்டத்தை தொடர்ந்திட உரிய ஆணை வழங்குமாறும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நகர விற்பனைக் குழுவின் விதிமுறைகளுக்கு இணங்க மாற்றுத் திறனாளிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனத் கூறியுள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு ஒவ்வொரு மண்டல, வார்டு அளவில் நடைபெறும் ஒதுக்கீட்டில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு அருகில் விற்பனைக்குரிய இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களிலும் கடைகள் ஒதுக்கீடு செய்வதில் முன்னுரிமையை இந்த அரசாணை வழங்கியுள்ளது என அந்த அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளி மக்களின் வாழ்வின் பொருளாதார மேன்பாட்டுக்கு உதவியாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

Related posts