தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரியில் கட்டாயமாக தமிழும் ஆங்கிலமும் இருக்க வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உத்தரவிட்டுள்ளார்.
இருமொழிகல்விக் கொள்கை
சென்னை, செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர் ‘தமிழகத்தின் கல்விக்கொள்கையை உருவாக்குவதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு குழுவை நியமித்திருக்கிறார். குழுவின் உறுப்பினர்கள் என்ன சொல்கிறதோ அதை பல்கலைக்கழகங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். நம்மைப் பொறுத்தவரை இருமொழிக் கொள்கை முக்கியமானது. அண்ணா காலத்திலிருந்து தற்போது வரை பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகம், கல்லூரிகளாக இருந்தாலும் கட்டாயமாகத் தமிழும் ஆங்கிலமும் இருக்க வேண்டும். தமிழகத்தில் தாய்மொழிக்கல்வியாக தமிழும் சர்வதேச தொடர்பு மொழியாக ஆங்கிலமும் இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

