சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைவு உள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை
சென்னை, கடந்த சில தினங்களாக சென்னையில் தங்கத்தின் விலை சற்று அதிகரித்து வருகிறது. ஆனால், இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து சவரன் 38,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 15 ரூபாய் குறைந்து 4,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 60.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 60,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

