விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொண்டாட்ட விதிமுறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி
நாடு முழுவதும் வரும் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தமிழகத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவின் விதிமுறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தற்போது அறிவித்துள்ளது. அதன்பெயரில், பாதிப்பு ஏற்படுத்தாத மூலப்பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டும் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தெர்மாகோலால் ஆன பொருட்களை அனுமதிக்க கூடாது என்றும் சிலைகளுக்கு வர்ணம் பூச செயற்கை ரசாயன வர்ணங்களை பயன்படுத்த கூடாது என்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

