பத்திரப்பதிவுத்துறையில் சட்டமீறல்கள் கொடிகட்டிப் பறக்கின்றது என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது. மேலும், இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
குற்றச்சாட்டு
‘தமிழ்நாட்டில் ஆட்சி சட்டப்படி தான் நடக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் பத்திரப்பதிவுத்துறையில் சட்டமீறல்கள் கொடிகட்டிப் பறக்கின்றது. இதுபோன்ற முறைகேடுகள் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை பத்திரப்பதிவுத்துறையின் அமைச்சர் பி.மூர்த்தி எடுக்கவேண்டும். மேலும், சட்டமீறலை இலஞ்சஒழிப்புத்துறை விரைவில் விசாரித்து, அவர்கள் மீது சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்’ இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய விமான நிலையம் அமையவுள்ள பரந்தூர், நெல்வாய் கிராமங்களில் நிலத்தின் வழிகாட்டு மதிப்பை பலமடங்கு ஏற்றி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.165 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள ஆதாரங்கள் பத்திரப்பதிவுத்துறையின் நம்பகத்தன்மையைக் pic.twitter.com/3mbFPEyJdb
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) August 19, 2022

