இயக்குனர் ஷங்கரின் மகள் நடிகை அதிதி ஷங்கரின் கருத்துக்கு ரசிகர்களிடம் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.
பிரபல நடிகை
முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் விருமன். தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான ஷங்கரின் மகள் அதிதி சங்கர் இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ பதட்டத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அதிதி ஷங்கர். ஷங்கரின் மகள் என்பதாலேயே இவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு எளிதில் கிடைக்கிறது என்ற விமசனங்கள் அதிதி ஷங்கர் மீது எழுந்து வருகிறது.
விமர்சனம்
இந்நிலையில், நடிகை அதிதி ஷங்கர் அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ‘என் தந்தையால் நான் சினிமாவிற்கு வந்திருக்கலாம். ஆனால் திறமை இல்லையென்றால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காது. சினிமாவில் நிலைத்து நிற்க முடியாது. இந்த துறையில் வாரிசு அந்தஸ்து கை கொடுக்காது’ என்று கூறியுள்ளார்.

