தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ஸ்டாலின் சகோதரி மற்றும் அவரது அம்மாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
தமிழிசை செளந்தரராஜன்
புதுச்சேரி மற்றும் தெலுங்கானா துணைநிலை ஆளுநராக இருப்பவர் தமிழிசை செளந்தரராஜன். இன்று காலை முதல்வர் ஸ்டாலின் சகோதரி மற்றும் அவரது அம்மாவையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோபாலபுரம் கிருஷ்ணர் கோயிலுக்கு சென்றிருந்த துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ஸ்டாலின் சகோதரியான தமிழ்ச்செல்வியை சந்தித்துள்ளார். மேலும், இல்லத்துக்கு சென்று தயாளு அம்மாவின் உடல் நலம் குறித்து விசாரித்ததாகவும் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.மேலும் அதே இல்லத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க பிரதமர் மோடியுடன் சென்ற நினைவுகளையும் பகிர்ந்துள்ளார்.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோபாலபுரம் கிருஷ்ணர் கோயில் சென்றேன். திரும்பும்போது தமிழக முதல்வர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரி திருமதி.தமிழ்ச்செல்வி அவர்களை சந்தித்தேன்.மரியாதை நிமித்தமாக இல்லத்திற்கு சென்று திருமதி.தயாளு அம்மாளை சந்தித்து உடல் நலம் விசாரித்தேன்.1/2 pic.twitter.com/sOkrLVg9fZ
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) August 18, 2022

