அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் சற்று ஏற்ற இறக்கங்களை காணப்பட்ட நிலையில், இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
தங்கம் விலை குறைப்பு
அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் சற்று ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருவதனால் சாதாரண மக்கள் இடையே பெரும் கலக்கம் அடைந்துள்ளனர். இந்நிலையில், இன்று தங்க விலை குறைந்திருப்பது மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து, 38,704 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், கடந்த ஜூலையில் தங்கத்திற்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியதை அடுத்து, தங்கத்தின் விலைவேகமாக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.

