காபூலில் உள்ள மசூதியில் தொழுகை நடைபெற்று கொண்டிருக்கும் போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
குண்டு வெடிப்பு
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஷியா, சன்னி பிரிவினர் இடையே தொடர் மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பிரசித்தி பெற்ற மசூதியில் நேற்று மதியம் ஏராளமானோர் வழக்கமான தொழுகை நடைபெற்றது. அப்போது, மசூதிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 30க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பலியாகினர். பலர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். குண்டு வெடிப்பில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.

