பா. ரஞ்சித் இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகியிருக்கும் நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பா. ரஞ்சித் படம்
சார்பட்டா பரம்பரை படத்தை இயக்குனர் பா. ரஞ்சித் உருவாக்கியுள்ள திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது. இதில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன், கலையரசன், ஹரிகிருஷ்ணன், ஷபீர் ஆகியோர் நடித்துள்ளனர். தென்மா இசையமைத்துள்ள இப்படத்தை நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படம் வரும் 31-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சிக்கல்
இந்நிலையில், நட்சத்திரம் நகர்கிறது படம் அறிவித்த தேதியில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படம் சென்சார் சான்றிதழுக்காக அனுப்பப்பட்டுள்ளது. படத்தில் சில காட்சிகள் சாதி பற்றிய வசனங்கள் இடம்பெற்றுள்ளது. இதனால் அதிகாரிகள் சென்சார் சான்றிதழ் தர மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

