அரசியல்கல்விசமூகம்தமிழ்நாடு

மூன்று பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்கள் – ஆளுநர் ஆணை !

அழகப்பா, மனோன்மணியம் சுந்தரனார் உள்ளிட்ட மூன்று பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்களை நியமனம் செய்து ஆளுநர் ஆர்.என். ரவி ஆணைகள் பிறப்பித்துள்ளார்.

புதிய துணைவேந்தர்கள்

அழகப்பா, திருவள்ளுவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்களை நியமனம் செய்து ஆளுநர் ஆணைகளை வழங்கினார். என்.சந்திரசேகர் திருநெல்வேலியில் இயங்கிவரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு என்.சந்திரசேகரை துணைவேந்தராகவும், காரைக்குடியை இயங்கிவரும் அழகப்பா பல்கலைக்கழக ஜி.ரவியை துணைவேந்தராகவும், டி.ஆறுமுகம் வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தராகவும் நியமித்து ஆளுநர் ஆணைகளை வழங்கினார்.

Related posts