துருக்கியில் தன்னை கடித்த பாம்பை கோபத்தில் திரும்ப கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாம்பை கடித்த சிறுமி
துருக்கியின் கந்தர் கிராமத்தில் கந்த 13ம் தேதி அன்று 2 வயது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்துள்ளார். அப்போது, பார்த்தபோது சிறுமியின் வாயில் அரை மீட்டர் நீளமுள்ள பாம்பு ஒன்று கடித்திருப்பதை கண்டனர். இதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறுமியின் கீழ் உதட்டில் பாம்பு தீண்டிய அடையாளமும் இருந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக சிறுமியை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றனர். உரிய சிகிச்சைக்கு பின்னர் சிறுமி காப்பாற்றப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்மை தீண்டிய பாம்பை சிறுமி கோபத்தில் கடித்து துப்பியதாக கூறப்படுகிறது. இதில் பாம்பு இறந்துள்ளது.

