டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது 54வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
பிரதமர் மோடி
டெல்லி, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது 54வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு நாட்டில் உள்ள பல தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்தி ட்விட் செய்துள்ளார். ட்விட் பதிவில், ‘கெஜ்ரிவாலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நல்ல உடல் நலம் நீண்ட ஆயுளுடன் கெஜ்ரிவால் நலமுடன் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். மேலும், டெல்லி துணை நிலை கவர்னர் சக்ஷேனாவும் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சக்ஷேனா வாழ்த்து தெரிவித்து தனது டுவிட்டர் பதிவில், ‘கெஜ்ரிவாலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
Birthday greetings to Delhi Chief Minister Shri @ArvindKejriwal Ji. I pray for his long life and good health.
— Narendra Modi (@narendramodi) August 16, 2022

