உறுப்பு தானம்
திரையுலகின் முன்னணி நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் பல மாதங்களாக சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த ஜூன் 27-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவர் இறந்த துக்கத்தில் இருந்த மீனா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார். இந்த சூழலில் நடிகை மீனா தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், என் கணவருக்கு யாராவது உறுப்புகள் தானம் செய்து இருந்தால். அவரது உயிர் பிழைத்திருப்பர். ஒருவர் உடல் உறுப்பு தானம் செய்தால் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கிறது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து எனது உடல் உறுப்புகளையும் நான் தானம் செய்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
— Meena Sagar (@Actressmeena16) August 13, 2022

