இந்தியாவில் முதல் முறையாக ராணுவ பயிற்சிக்காக பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Shanghai Cooperation Organization
எஸ்சிஓ (Shanghai Cooperation Organization) எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த அமைப்பு மூலமாக ஒவ்வொரு ஆண்டும் அனைத்து நாடுகளும் சேர்ந்து தீவிரவாத தடுப்பு பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், இந்த ஆண்டிற்கான பயிற்சி இந்தியாவின் அரியானா மாநிலம், மனேசரில் அக்டோபரில் நடக்க உள்ளது. இதில் பாகிஸ்தான் ராணுவமும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எஸ்சிஓ (Shanghai Cooperation Organization) அமைப்பில் பாகிஸ்தானும் ஒரு உறுப்பினர் என்ற வகையில், பயிற்சியில் பங்கேற்க உள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கூறி உள்ளது. ஆனால், இந்தியாவில் நடக்கும் பயிற்சியில் பாகிஸ்தான் பங்கேற்பது இதுவே முதல்முறை எனவும், இருதரப்பு உறவுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

