75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் ஒவ்வொரு இந்தியர்களுக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் என்று நடிகர் கமல் ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சுதந்திர தின வாழ்த்து
75-வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாட படவுள்ளது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள், பிரபலங்கள் பலரும் தங்களது வீடுகளில் தேசிய கொடி பறக்கவிட்டுள்ளனர். மேலும், தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை சென்னை ஜார்ஜ் கோட்டையில் கொடி ஏற்றுகிறார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், மக்களுக்கு வீடியோ மூலம் தனது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அதேபோல் தற்போது நடிகர் கமல்ஹாசன் அறிக்கை மூலம் தனது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் ஒவ்வொரு இந்தியர்களுக்கும் என் மனப்பூர்வமான சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! pic.twitter.com/mtGsE0NAoF
— Kamal Haasan (@ikamalhaasan) August 14, 2022

